Tamil Panchangam thamiz naaL pozuthu

Advertisement:

Panchangam, tamil panchangam, generate tamil calendar online, weekly Panchangam, monthly Panchangam. Panchangam for every city, town as per longitude and latitude, தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)



Prev dayNext day
29-Aug-2015 Saturday
கலியுகாதி:5117 மன்மத வருடம்
ஆவணி,12, சனி
திதி: வளர்பிறை (சுக்ல பக்ஷம்), சதுர்தசி,29-08-2015 03:34 AM வரை
நக்ஷத்திரம்: அவிட்டம், 29-08-2015 03:30 PM வரை
யோகம்: அதிகன்டம், 29-08-2015 05:58 PM வரை
கரணம்: வனிசை
ராகு காலம்: 09:17 AM to 10:50 AM
யமகண்டம்:01:55 PM to 03:28 PM
குளிகன்:06:12 AM to 07:44 AM
வார சூலை: கிழக்கு, தென்கிழக்கு 09:24 AM வரை; பரிகாரம்: தயிர்
அமிர்தாதியோகம்:சித்தயோகம்
சந்திராஷ்டமம்: மிதுனம்
நேத்திரம்: 2
ஜீவன்: 1
விவாஹ சக்கரம்: நைருதி (தென்மேற்கு)

"தமிழ் ஐந்திரன் நாள் காட்டி" (தமிழ் பஞ்சாங்கம்) என்பது ஐந்து துணை கால்களை கொண்டதாகும்.

அவை முறையே:

1. திங்கள் அடிப்படையிலான நாள் (திதி - தியதி - தேதி)
2. ஏழு நாட்களை கொண்ட பொழுதளவு (வாரம்)
3. வின்மீண்கள் (நட்சத்திரம்)
4. ஞாயிறு - திங்கள் அடிப்படையிலான நாள் (யோகம்)
5. திங்கள் அடிப்படையிலான நாளில் அரை பகுதி (கர்ணம்)

"தமிழ் ஐந்திரன் நாள் காட்டி" (தமிழ் பஞ்சாங்கம்)-யின் இந்த ஐந்து திறனில், சில நேரடி திறனையும் மற்றவை மறைமுக திறனையும் கொண்டவை. இவ்வகை திறன்கள் தாக்கத்தால் மனிதனின் உடல் நிலை, பொருளாதார நிலை மற்றும் மனித மேன்மையில் மாற்றம் ஏற்படுத்துவதாக நம்பிக்கை.

"தமிழ் ஐந்திரன் நாள் காட்டி", ஒவ்வொருவர் வாழும் இடம் அல்லது ஊருக்கானதாக கணக்கிடப்படவேண்டும்.

நாம் பயன்படுத்தும் அச்சிடப்பட்ட நாள் காட்டி இந்தியாவின் உச்செயின் (Ujjain) என்ற ஊரின் நேர அடிப்படையில் "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி" கணக்கிட்டு அச்சிடப்படுகிறது. மதுரை, திருநெல்வேலி என்று ஊருக்கு ஒரு "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி" கணக்கிட்டு அச்சடிப்பப்படும் தமிழ் ஐந்திரன் நாள் காட்டிகளும் நாம் வாழும் பகுதிக்கு பொருந்தாததாகவே இருக்கும்.

ஏன் என்றால், ஞாயிறு தோண்றலும் மறைதலும், ஊருக்கு ஊர் வேறுபடும். "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி" என்பது ஞாயிறு தோண்றலையும் மறைதலையும் அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுவதால், "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி" முறையாக - சரியாக கணக்கிட ஒவ்வொருவரும் அவர் அவர் ஊர்களுக்கு கணக்கிட்டுக்கொள்ள ஏதுவாக இந்த கணக்கிடும் தள வசதி இந்த இனைய பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இந்த இனைய பக்க வசதி மூலம், இந்த பூமியின் எந்த மூலை முடுக்கிற்கும், எந்த ஊருக்கும், பேரூருக்கும் சரியான "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி" கணக்கிட முடியும்.

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்:

1. தேவையான நாளை படிவத்தில் நிறப்புங்கள்
2. ஊரின் பெயரை குறிப்பிடுங்கள் - முதல் மூன்று அல்லது நான்கு பெயரின் ஆங்கில எழுத்துக்களை உள்ளிட்டு தேடுதல் பொத்தானை சொடுக்குங்கள்
3. உங்கள் ஊரின் பெயர் தானாக உள் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றால், அந்த ஊருக்கான ரேகை குறியீடுகளை இங்கே கணக்கிட்டு உள்ளிடுங்கள்

The Panchangam consists of five limbs or accessories, viz: Tithi (lunar day), Vara (weekday), Nakshatram (constellation). Yoga (a lunisolar day), and Karana (half a lunar day). The five limbs of the Panchangam are supposed to represent the five sources of ethereal energy of which some are visible and others invisible and which when properly secured are said to conduce the health, wealth and prosperity of mankind.

Panchangam should be calculated for the place you live. Since calendars show Panchangam for particular place it is not accurate. Sun rise and sun set times differ from place to place. Panchangam is highly dependent on sun rise, sun set timings. So we offer a tool to calculate exact panchangam based on your city / town / village / place of living. Generate your Panchangam, you will be surprised to notice that the Rahu kaalam, Yemakandam, Kulikai timings change according to the place for which you generated your Panchangam!!!

You can generate Panchangam for any place on earth and for any date and time. Please enter date in dd-mm-yyyy format. Enter few letter of your city and click search. The longitude, latitude and time zone will be filled automatically.

Advertisement: